fbpx
Homeபிற செய்திகள்தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சுப் பணியாளர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக கடந்த 10 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை பணி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு பணி உயர்வு வழங்கி ஊதிய உயர்வை வழங்க வேண்டும் என்றும், இ.எம்.ஐ.எஸ் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்றும் 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் திருக்குமரன், மாவட்ட செயலாளர் விஜயராகவன், மாவட்ட பொருளாளர் ரஞ்சித் குமார் மற்றும் ஏராளமான அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img