fbpx
Homeபிற செய்திகள்ஆதரவற்ற முதியவர்களுடன் தீபாவளி கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

ஆதரவற்ற முதியவர்களுடன் தீபாவளி கொண்டாடிய பள்ளி மாணவர்கள்

தூத்துக்குடி மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், ஸ்பிக் நகர் ரோட்டரி கிளப்பின் பள்ளி மாணவர் அமைப்பான இன்ட்ராக்ட் கிளப் மாணவ மாணவிகள் ஆதரவற்ற முதியவர்களின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்திடும் விதமாக தீபாவளி அன்று, தூத்துக்குடி சிதம்பர நகரிலுள்ள முதியோர் இல்லமான பாசக்கரங்கள் சென்று போர்வைகள், இனிப்புகள், பிஸ்கட் கட்டுகளையும் வழங்கினர்.

இல்லத்தில் இருக்கும் பெரியோர்கள் மனம் மகிழ ஆடல், பாடல், தனி நபர் நடிப்பு நிகழ்ச்சிகளையும் வழங்கினர்.

பள்ளி மாணவர்களிடையே பொதுநல சேவை மனப்பான்மை வளரவேண்டும் என்ற குறிக்கோளுடன் நடந்த இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை கு.மீனாகுமாரி, இண்டராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை கிரேஸ்ராணி, பாசக்கரங்கள் அமைப்பாளர் முத்துப்பாண்டி, சமூக ஆர்வலர் திரு.தாமோதரன் மற்றும் அனைத்து இன்டராக்ட் கிளப் மாணவ மணிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img