fbpx
Homeபிற செய்திகள்ஸ்கேட்டிங் சாதனை; சைதன்யா பள்ளி மாணவனுக்கு செந்தில்பாலாஜி பாராட்டு

ஸ்கேட்டிங் சாதனை; சைதன்யா பள்ளி மாணவனுக்கு செந்தில்பாலாஜி பாராட்டு

தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசி யேசன் சார்பில் 34வது தமிழ்நாடு மாநில மாநில அளவிலான ஸ்கேட்டிங் ( சறுக்குப்போட்டி) கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.

இப்போட்டியில், கரூர்- சேலம் பைப் பாஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் தருண் கிருத்திக், 7 வயது முதல் 9 வயது வரையிலான Rink -IV பிரிவில் மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.

சாதனை படைத்த மாணவனுக்கு கரூர், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி குழுமம் சார்பில் நேற்று பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த தகவல் அறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img