சென்னை, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SRMIST), அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் இளையோர் திருவிழாவின் 38-வது பதிப்பை “எஸ்ஆர்எம் சிகரம்” என்ற பெயரில் தனது வளாகத்தில் நடத்தியது.
இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம் (AIU) நிறுவப்பட்ட 100-வது ஆண்டையும் இந்நிகழ்வு குறிக்கிறது.
ஐந்து நாட்கள் நிகழ்வாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இத்திருவிழாவை SRMIST-யின் நிறுவனர் வேந்தர் டாக்டர். T.R. பாரிவேந்தர் தொடங்கி வைத்தார்.
இதில் SRMIST-யின் துணை வேந்தரும், AIU-வின் கூடுதல் செயலருமான மம்தா அகர்வால், கலாச்சார பரிமாற்றம் மற்றும் இளையோரின் திறனதிகாரம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தமிழ்நாடு, ஆந்திரபிரதேஷ் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 21க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களிலிருந்து இந்நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், செண்ட மேளம், திருவாதிரை காளி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், மோகினியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பல கலாச்சார மற்றும் அறிவுசார் நிகழ்வுகள் சிகரம் இளையோர் திருவிழா கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களாக இருந்தன.