fbpx
Homeபிற செய்திகள்ஸ்கோடாவின் ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம்

ஸ்கோடாவின் ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா ஐந்து நட்சத்திர பாதுகாப்பான, கிராஷ்-டெஸ்ட் செடானின், ஸ்லேவியா ஸ்டைல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த தயாரிப்பு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் ஜெனேபா கூறுகையில், “ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன், எங்கள் பெருமை மிகு வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு இணங்க, வாடிக்கையளர்கள் மீது கவனம் செலுத்தி குறைந்த எண்ணிக்கையில் லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்துகிறோம்.

ஆனாலும், இந்தியா முழுவதும் 200+ விற்பனை டச் பாயிண்ட்களில் லிமிடெட் எடிஷன் கிடைக்கும்“ என்றார்.

ஸ்லேவியாவின் ஸ்டைல் வேரியண்ட் டாப்-ஆஃப்-தி-லைன் அடிப்படையில், ட்யூயல் டேஷ் கேமரா உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் ஸ்டைல் எடிஷன் அறிமுகமாகிறது. பிளாக்ட் அவுட் பி-பில்லர்கள், பிளாக் கண்ணாடி கவர்கள், பிளாக் ரூஃப் ஃபாயில் ஆகியவற்றின் மீது ’எடிஷன்‘ பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கும்.

மகிழுந்துக்குள் ‘ஸ்லேவியா‘ பிராண்டெட் ஸ்கஃப் பிளேட் ஸ்டீரிங்கில் ‘எடிஷன்‘ பேட்ஜ் காணலாம். ஸ்டைல் எடிஷனின் 500 அலகுகளை ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்துகிறது.
95% உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மகிழுந்து 4 ஆண்டுகள் அல்லது 100,000 கி.மீ நிலையான உத்தரவாதம் மற்றும் 8 ஆண்டுகள் அல்லது 1,50,000 கி.மீ வரை விருப்ப உத்தரவாதம். ஸ்லேவியா ஸ்டைல் எடிஷன் 1.5 டிஎஸ்ஐ டிஎஸ்ஜி மாடல் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.19,13,400/-ஆகும்.

படிக்க வேண்டும்

spot_img