fbpx
Homeபிற செய்திகள்ஈக்யூ இந்தியா நிறுவனம் சார்பில் அரசு பழங்குடியினர் பள்ளிக்கு சூரிய சக்தி மின்சார வசதி

ஈக்யூ இந்தியா நிறுவனம் சார்பில் அரசு பழங்குடியினர் பள்ளிக்கு சூரிய சக்தி மின்சார வசதி

ஈக்யூ இந்தியா நிறுவனம், ஹாசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப்பள்ளிக்கு சூரிய சக்தி மூலம் மின்சார வசதியை அமைத்து கொடுத்துள்ளது.

கடந்த ஜூலை 2024ல் இப்பள்ளியை புனரமைக்கும் பணிகளை துவங்கிய ஈக்யூ இந்தியா நிறுவனம் முதல்கட்டமாக பணிகளை முடித்தது.

தற்போது இரண்டாம் கட்டமாக, வகுப்பறைகள், பள்ளி அலுவலகம் மற்றும் மாணவர் விடுதிகளுக்கு அத்தியாவசிய காப்பு மின்சாரம் வழங்குவதற் காக 5 கிலோவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், உள்ளிட்ட பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து ஈக்யூ இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமகிருஷ்ணன் கூறுகையில், “மாணவர் களின் கல்வி வசதிக் காக தமிழ்நாட்டின் ஹாசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம்“ என்றார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பி.பாலகிருஷ்ணன் கூறுகையில், “சூரியசக்தி மின்சார வசதி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதுடன் இப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் பயனளிக்கிறது.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img