fbpx
Homeபிற செய்திகள்சந்தையில் 18 சதவீத டிராக்டர்கள் விற்பனை செய்து சோனாலிகா சாதனை

சந்தையில் 18 சதவீத டிராக்டர்கள் விற்பனை செய்து சோனாலிகா சாதனை

இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் ஏற்றுமதி பிராண்டான சோனாலிகா டிராக்டர்ஸ் கடந்த ஆண்டை சிறப்பான வளர்ச்சி மற்றும் சாதனையுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் ஒட்டுமொத்த டிராக்டர் விற்பனை சந்தையில் 18 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு 7,999 டிராக்டர்களை விற்பனை செய்த இந்நிறுவனம் கடந்த ஆண்டில் 33 சதவீதம் வளர்ச்சி அடைந்து 10,639 டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. தொழில்துறை வளர்ச்சியைப் பொறுத்தவரை இது 2.4 மடங்கு வளர்ச்சியாகும்.

நிதி ஆண்டு 2025-லும் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய தேதி வரையிலான விற்பனையைப் பொறுத்தவரை கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் இதன் மொத்த விற்பனையானது 1,19,369 டிராக்டர்களாக உள்ளது.

ஒவ்வொரு விவசாயியின் தனிப்பட்ட தேவைகளை அறிந்து அவற்றை பூர்த்தி செய்து வருவதால் இந்த சாதனையை எட்ட முடிந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் ராமன் மிட்டல் கூறுகையில், “ஒவ்வொரு டிராக்டரிலும், நமது விவசாய சமூகத்தின் வளர்ச்சி, மீள்தன்மை மற்றும் நம்பிக்கையின் விதைகளை விதைப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி வருகிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img