முன்னணி இந்திய ஒளிபரப் பாளரான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI), UEFA சாம்பியன்ஸ் லீக், UEFA உள்ளிட்ட மிகப்பெரிய ஐரோப்பிய கிளப் கால்பந்து லீக்குகளைக் பிரத்யேக ஒளி பரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் புதுப்பித்து, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன் றியத்துடன் (UEFA) தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது.
மூன்று சீசன் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, ஒளிபரப்பாளர் மூன்று சீசன்களில் அதன் சேனல்களில் 1600-க்கும் மேற்பட்ட கால்பந்து போட்டிகளை இதன் மூலம் கண்டுகளிக்கலாம்.
இந்த யுஇஎஃப்ஏ போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் உள்ள தொலைக்காட்சியில் நேரலையில் பிரத்தியேகமாக கிடைக்கும். இந்திய துணைக் கண்டத்தில் உள்ளவர்களின் தேவைக்கேற்ப OTT தளமான Sony LIVE-ல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 2020-21 சீசனில் 25% ஆக இருந்த பிராந்திய கவரேஜ் பங்களிப்பு கடந்த சீசனில் 2022-23ல் 38% ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர, UEFA EURO 2024, Bundesliga, Emirates FA Cup, Roshn Saudi Pro League மற்றும் பலவற்றிற்கான அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளராக Sony Sports Network தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.