fbpx
Homeபிற செய்திகள்கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் தென்னிந்திய தேயிலை விழிப்புணர்வு

கோவை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் தென்னிந்திய தேயிலை விழிப்புணர்வு

கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “தென்னிந்திய டீ” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இந்திய தேயிலை வாரியத்தின் ஆராய்ச்சி இயக்குநர் முனைவர்
மகிபால்சிங், கௌரவ விருந்தினராக கிரிஸ்டல் இந்தியா டீ லிமிடெட் நிர்வாக இயக்குனர் தீபக் ஷா, கோயம்புத்தூர் தேயிலை வர்த்தக சங்கத்தின் தலைவர் கிரிஷ் நாயர் மற்றும் இந்திய தேயிலை கழகம் மற்றும் பல்வேறு முன்னணி தேயிலை நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் முனைவர் சரவணன் தலைமை தாங்கினார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்திய தேயிலைகளின் பல்வேறு வகைகள், அவற்றின் தனித்துவமான பயன்பாடுகள், அவற்றில் உள்ள மருத்துவ குணங்கள், சத்துக்கள் மற்றும் சர்வதேச சந்தையில் உள்ள ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பாக, இந்திய தேயிலைகளின் தரம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தேயிலை உற்பத்தி மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தேயிலை கழகத்தின் நிர்வாகிகள், இந்திய தேயிலைகளுக்கு சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img