fbpx
Homeபிற செய்திகள்நலவாரிய உறுப்பினராக ஆட்டோ டிரைவர்கள் சேர சிறப்பு முகாம்: கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்...

நலவாரிய உறுப்பினராக ஆட்டோ டிரைவர்கள் சேர சிறப்பு முகாம்: கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்

கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கான நல வாரியத்தில் இலவச உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது.

நேற்று நடந்த முகாமின் தொடக்க விழாவிற்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமை தாங்கினார். முதல் நாளில் 40 பெண் ஆட்டோ டிரைவர்கள் உட்பட 230 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இதில் கோவை வீர பெண்கள் குழுவைச் சேர்ந்த பெண்களும் அடங்குவர்.

முகாமை தொடங்கி வைத்து போலீஸ் கமிஷனர் ஏ.சரவண சுந்தர் பேசியதாவது: கோவை மாநகர பகுதியில் நல வாரியம் மூலம் ஆட்டோ ஓட்டும் டிரை வர்களின் 6 முதல் 10ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1500 வழங்கப் படுகிறது. முதல் முறையாக விடுதியில் தங்கி பட்டப்படிப்பு படிக்கும் ஆட்டோ டிரைவர்களின் குழந்தைகளுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஆண் குழந்தைகளின் திரு மணத்திற்கு ரூ.3 ஆயிரம், பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு ரூ.5000, ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.5000 இயற்கையாக மரணம் ஏற்பட்டால் உதவித் தொகை ரூ.50,000 விபத்தினால் மரணம் அடையும் டிரைவர்களின் குடும்பத்தாருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5000, விபத்து மரண உதவித்தொகையாக ரூ.2 லட்சம் ஆகியவை வழங்கப்படுகிறது-.

ஆட்டோ டிரைவர்கள் விபத்தில் காயமடைந்தால் ஒரு லட்சம், வயதான டிரைவர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.1200 வழங்கப்படுகிறது. பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்கு மானியமாக அரசு ஒரு லட்சம் வழங்குகிறது.

எனவே கோவை மாநகரத்தில் ஆட்டோ ஓட்டும் டிரைவர்கள் உறுப்பினர் கள் ஆகாவிட்டால் இந்த முகாமை பயன்படுத்தி உறுப்பினர்களாக சேர்ந்து அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் போக்குவரத்து துணை கமிஷனர் எஸ்.அசோக் குமார், ஆயுதப்படை துணை கமிஷனர் ராஜ் கண்ணர், உதவி கமிஷனர்கள் ஏ.சேகர், டி.நாகராஜன், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் வங்கி அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள், தபால் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img