fbpx
Homeபிற செய்திகள்ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோவையில் தூய்மை பாரத இயக்க சிறப்பு விழா

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் கோவையில் தூய்மை பாரத இயக்க சிறப்பு விழா

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் கோவை சூலூர் ஊராட்சி ஒன்றியம் கணியூர் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் 2024 சிறப்பு விழா ஊஞ்சபாளையம் இந்திரா நகரில் உள்ள எஸ்.என்.கே. மஹாலில் நடைபெற்றது.

இதில் கணியூர் ஊராட்சியில் 2024ம் ஆண்டில் பிறந்த பெண் குழந்தைகளை ஊக்குவிக்கவும் பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரம் நடும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் கணியூர் ஊராட்சி மன்ற தலைவர் வேலுசாமி முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் நிகழ்வில் மருத்துவ முகாம் நடந்தது. இதனை கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன் துவக்கி வைத்தார். நிகழ்வைத் தொடர்ந்து மீண்டும் மஞ்சப்பை பிளாஸ்டிக்கு குட்பை நிகழ்வை சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் துவக்கி வைத்தார்.

இறுதி நிகழ்வாக கணியூர் ஊராட்சியில் உள்ள அனைத்து மகளிர்கள் பங்கேற்கும் மகிளா சபை கூட்டத்தை கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன் துவக்கி வைக்க , சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் தமிழரசி செந்தில்குமார், செல்வநாயகி அன்பரசு, அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ், சூலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கள சத்தியா, மருத்துவ அலுவலர் பூவிதா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

இறுதியாக கணியர் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜு நன்றி உரையாற்றினார்.
நிகழ்வில் அரசூர் ஊராட்சி செயலாளர் கணேச மூர்த்தி, சின்னியம்பாளையம் ஊரா ட்சி செயலாளர் லீலா கிருஷ்ணன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கணியூர் ஊராட்சி செயலாளர் ஜெகதீஷ் மற்றும் கணியூர் ஊராட்சி அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img