கோவை நீலம்பூரில் உள்ள கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடோஸ் 2k24 என்ற பெயரில் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராணுவ அதிகாரி கர்னல் ஹரிஷ்ரா மற்றும் விமானப்படை அதிகாரி ஸ்குவாடன் லீடர் நிதி சங்வான் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
மேலும் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உடற்பயிற்சியாளர் டாக்டர் திவ்யா ஜெயக்குமார் மாணவர்களுக்கு ஜூம்பா நடனத்தை பயிற்றுவித்தார். இறுதியாக போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இவ்விழா வில் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கற்பகம், உடற்கல்வி இயக்குனர் முனைவர் எஸ்.வசந்தகுமார் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.