சென்னை மாநகரின் மிகப் பெரிய, ஒருங்கிணைக்கப் பட்ட நகரியமான எஸ்பிஆர் சிட்டி, இந்தியாவின் மிகப்பெரிய ஆபரண சங்கிலித்தொடர் நிறுவனங்களுள் ஒன்றாக ஜோய்ஆலுகாஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருப்பதை
அறிவித்திருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் விருந்தி னர்கள் முன்னிலையில் நடை பெற்ற நிகழ்வில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது குறித்து எஸ்பிஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹித்தேஷ் கவாத் பேசுகையில், “எமது நகரிய செயல்திட்டத்தில் பிரபல ஆபரண பிராண்டான ஜோய் ஆலுகாஸ் அதன் ஷோரூமை நிறுவுவது எஸ்பிஆரில் உள்ள எங்களுக்கு மிகப்பெரிய பெரு மைக்குரிய விஷயமாகும்.
எஸ்பி ஆர் சிட்டிக்குள் மிகச்சிறந்த வசதி களும், நாடெங்கிலும் புகழ்பெற்ற முதன்மையான ரீடெய்ல் நிறுவனங்களும் இடம்பெறும் என்ற எமது வாக்குறுதி நிறை வேற்றப்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
இந்த அறக்கட்டளை நிறுவனத்தின் மூலம் பயிற்சி மற்றும் மேம்பாடு அரசு கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வங்கி வழங்கும் வசதிகள் குறித்த விழிப்புணர்வு, வர்த்தகத்தின் எதிர்காலம் குறித்து வெள்ளை அறிக்கைகளை வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.