தாளவாடி ஸ்ரீபண்ணாரி அம்மன் தொண்டு அறக்கட்டளை சார்பில் தாளவாடி, ஆசனூரை சுற்றியுள்ள மலைவாழ் மக்கள், ஏழை எளியோர் மற்றும் முதியோர்களின் முன்னேற்றத்திற்காக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருதல், இலவச உடைகள் வழங்குதல், பொருளுதவி வழங்குதல் உள்ளிட்ட சேவைகளை செய்து தருகிறது.
இதன் தொடர்ச்சியாக தைதப்பூசத்தை முன்னிட்டு ஏழை எளிய மலைவாழ் மக்கள் 100 பேருக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. அறக்கட்டளைத் தலைவர் எஸ்.மாணிக்கம், துணைத் தலைவர் எ.தினேஷ்குமார், பொறுப்பாளர் எம்.ராணி உள்ளிட்டோர் கிராமத் திற்கு நேரில்சென்று வழங் கினர்.அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இலவச சேலைகளைப் பெற்றுக் கொண்ட மலைவாழ் மக் கள் மகிழ்ச்சியினையும், நன் றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.