fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கோவை, துடியலூர் வட்ட மலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 26வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் அலமேலு சிறப்புரை ஆற்றினார்.

முதலாம் நாள் விழாவில் சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவன தலைமை தகவல் அதிகாரி, சங்கர் விஸ்வநாதன் 530 பேருக்கு பட்டம் வழங்கினார்.

இரண்டாம் நாளில் ஐபிஎம், குவாண்டம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் டாக்டர். எல். வெங்கட சுப்ரமணியம், முதுகலையை சேர்ந்த 503 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.
மேலும் துறைகளின் சார்பில் முதல் மதிப்பெண் பெற்ற 11 பேருக்கு தங்கப்பதக்கங்களும் சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழாவில் துணை முதல்வர் கருப்புசாமி, துறை தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img