கோவை துடியலூர் வட்டம் மலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை கேர்ஸ் ரினியூவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து மற்றும் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் பயிற்சியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர் அல்லி ராணி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கேர்ஸ் ரினியூவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் பயிற்சியாளர்கள் சங்க தலைவருமான டாக்டர் ரகுராம் அர்ஜுனன் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்கான ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் நடைமுறைப் பயிற்சியை மேம்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் சவால்களைச் சந்திக்க உதவியாக இருக்கும்.
இவ்விழாவின் இறுதியில் , உதவி பேராசிரியர் செபாஸ்டியன் வின்றோ ஜூட் நன்றி கூறினார்.