மேட்டுப்பாளையம் ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் சர்லின் வரவேற்று பேசினார். பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்டு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து கண்காட்சி அரங்கை பார்வையிட்டார் பள்ளித் தாளாளர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
பள்ளி மாணவர்கள் பல்வேறு விதமான அறிவியல் மாதிரிகளை பார்வைக்கு வைத்தனர். பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியை கண்டு இரசித்தனர். இக்கண்காட்சி ஏற் பாட்டை அறிவியல் ஆசிரியை பூர்ணிமா, கோகிலபிரியா, ஜெயந்தி, ஜி.பூர்ணிமா செய்திருந்தனர்.