ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் ஒன்று சேருவோம் எழுவோம் என்ற பெயரில் உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய பிராண்டு விளம்பர படத்தை வெளியிட்டிருக்கிறது. பிணைப்பு மற்றும் ஒற்றுமையின் ஆற்றலை முன்னிலைப்படுத்தும் வகையில், வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவுடன் கூட்டாக இணைந்து செயல்படுவதில் ஸ்ரீராம் பைனான்ஸின் அர்ப்பணிப்பை இவ்விளம்பரம் சித்தரிக்கிறது.
மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுடன் உறுதியான உறவுகளை உருவாக்குவதன் மூலம் ஆற்றலைப் பெறவும், கனவுகளை நிஜமாக்கவும் நாங்கள் உதவுகிறோம்.
குழுவாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கும், தளராமல் துணிவுடன் மீண்டெழும் திறனைக் கொண்டிருப்பதற்கும் அடையாளமாக விளங்கும் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் திராவிட் ஸ்ரீராம் பைனான்ஸின் பிராண்டு தூதராக இதில் இடம்பெறுகிறார். இந்த பிராண்டு கொண்டிருக்கும் பொறுப்புறுதியை ராகுல் திராவிட்டின் பங்கேற்பு மேலும் வலுப்படுத்துகிறது.
இது குறித்து மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குநர் எலிசபெத் வெங்கட்ராமன் கூறியதாவது: ஏழு மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் படைப்புத்திறன் மிக்க அணுகுமுறையானது, நாடெங்கிலும் உள்ள பல்வேறு தரப்பினரோடும், ஆழமான பிணைப்பை நாங்கள் உருவாக்க எங்களுக்கு உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.