fbpx
Homeதலையங்கம்ஸ்டாலின் பதிலடியும் எடப்பாடி நாடகமும்!

ஸ்டாலின் பதிலடியும் எடப்பாடி நாடகமும்!

கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை சட்டங்களில்(சிஏஏ) மாற்றத்தை கொண்டுவருவதாக அறிவித்தது. குடியுரிமை சட்டத்தில் மத ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சரத்துக்கள் இருப்பதாகவும் கூறி நாடுமுழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

இந்த சூழலில் கொரோனா பேரிடர் வந்ததால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் தான் கொண்டுவந்த சட்டங்களையும் ஒன்றிய பாஜக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதனிடையே வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சிஏஏ சட்டம் நடைமுறை படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாகூர் தெரிவித்திருந்தார்.
உடனடியாக இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஒருபோதும் கால்பதிக்க விடமாட்டோம் என பதிலடி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி அவசரம் அவசரமாக குரல் எழுப்பி உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img