கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மருத்துவ சேவைக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது சமூக பொறுப்பு நிதியில் (சிஎஸ்ஆர்) இருந்து ரூ.72,86,500 ஐ வழங்கி உள்ளது. இதற்கான காசோலையை மருத்துவமனை அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் கல்பனா நரேந்திரனிடம் வங்கியின் சேர்மன் செல்லா ஸ்ரீனிவாசலு செட்டி வழங்கிய போது எடுத்த படம்.