பேராக் ஒகினாவா கோஜ்ரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி சிதம்பரம் அருகில் உள்ள கீழ மூங்கில் அடி ராகவேந்திரா கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டிக்கு ராகவேந்திரா கல்லூரியின் தாளாளர் டி.வி.கே.பாபு தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் பி.சத்யராஜ் முன்னிலை வகித்தார். கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் சென்சாய்.வி. ரெங்கநாதன் வரவேற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். சிதம்பரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் டி.ஏ.ஜே. லாமேக், தமிழ்நாடு ஊழல் தடுப்பு இயக்கம் தலைவர் ஜெக சண்முகம் ஆகியோர் வழங்கினர்.
இப்போட்டியில் எஸ்.அபிநாஸ்ரீ,பி,மதுலியா, பி.ஆர்.சாருலதா,எஸ் கவுசிகா,பிஆர்.லக்ஷனா,ஆர். பவன்குமார்,எம்.தனுஷ். பி.தரகேஷ்,ஆர்.கர்சிராம்,எஸ் சுஜித்,எ.லெனி ஜோஸ் லியோ. ஆண்டோ ஹரிஷ்,ஏ.பாரதி பிரியா,ஆர் சனி திஸ்,குக்கநாத், பிரவீன், கமலேஷ்வரன்,ஜெகன் ஸ்ரீதரன் ஆகியோர் பிளாக் பெல்ட் பட்டம் பெற்றனர்.
இப்போட்டிகள் கட்டா மற்றும் சண்டை பிரிவில் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் பாண்டிச்சேரி திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் பங்கு பெற்றனர்.
இவ்விழாவில் கராத்தே பயிற்சியாளர் இளவரசன். பிருத்தி யூனன்,ஷர்மா. ரவிக்குமார்,சத்தியமூர்த்தி, சிகாமணி கிஷோர். ராமலிங்கம்,முத்துராஜ்.ஆசிரியை ஜெயப்பிரியா, முருகன், சிவரஞ்சனி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கு பெற்றனர். விழா முடிவில் ஆர்.ஷர்மா நன்றி கூறினார்.