தேவாலய பிரதிநிதிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் சொஜோ அருண் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட சிறுபான்மை மக்கள் கலந்துரையாடல் கூட்டம் ஆணையத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுங்கார தலைமை வகித்தார்.
பின்னர் மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் சொஜோ அருண் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது மதுரை உயர்நீதிமன்றம் தேவாலய சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இந்து சமய அறநிலைத்துறை போல ஒரு அமைப்பை ஏற்படுத்தி சொத்துக்களை பாதுகாக்க ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது . இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இது சம்பந்தமாக தேவாலய பிரதிநிதிகள் கூட்டம் விரைவில் நடைபெறும். அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும், என்றார். கர்நாடகாவில் சிறு பான்மை யினருக்கு நாலு சதவீதம் டெண் டர்களில் முன்னுரிமை வழங்கப்பட்டது போன்று வழங்கப்படுமா என்ற கேள்விக்கு ஆணைய கூட்டத்தில் இது போன்ற யோசனை ஏதும் வரவி ல்லை. அப்படி வந்தால் அரசுக்கு அது சம்பந்தமாக பரிந்துரைக்கப்படும் என்றார்.
ஈரோடு சிஎஸ்ஐ நிர்வாகத்தின் கீழ் 12.6 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. அதை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது குறி த்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இது சிறுபான்மையினர் மீது அரசு காட்டும் அக்கறை கரிசனத்தை வெளிப்படுத்துகிறது. இது சம்பந்தமாக சி எஸ் ஐ நிர்வாகம் மனு அளித்து ள்ளது. அந்த மனுவும் பரிசீலனை செய்யப்படும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், புதிதாக சர்ச்சுகள் மசூதிகள் கட்ட மானியம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே இருக்கும் மசூதிகள் மற்றும் சர்ச்சுகள் பழுது பார்க்க அதிக நிதி ஒதுக்க அரசை கேட்போம். மொழி சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற மனு ஏதும் வரவில்லை. சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இணையாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையும் வந்துள்ளது என்றார்.