fbpx
Homeபிற செய்திகள்தக்காளியில் ஒட்டுதல் முறை பற்றி விவசாயிகளுக்கு அமிர்தா கல்லூரி மாணவர்கள் பயிற்சி

தக்காளியில் ஒட்டுதல் முறை பற்றி விவசாயிகளுக்கு அமிர்தா கல்லூரி மாணவர்கள் பயிற்சி

அரசம்பாளையத்தில் உள்ள அமிர்தா வேளாண் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவியர் ஊரக வேளாண் செயல்முறை பயிற்சி அனுபவத் திட்டம்-கிராமப்புற தங்குதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான நவீன யுக்தி செயல்முறை விளக்க முகாமை நடத்தினர்.

இந்நிகழ்வில் நவ்யா, கீர்த்தனா, சாய் ஷ்ரேயா, சாய்ஷோபனா, காவியா, பிருத்விராஜ், சிவானி, நிதின், தேவிகா, ஐஸ்வர்யா, ஆதித்யன் குருப், ஆர்த்ரா, கோபிகா, சோனிஷ், சுதீந்த்ரா கிருஷ்ணா ஆகிய மாணவ, மாணவியர் பங்கு வகித்தனர்.

வடசித்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். லாபத்தை அதிகரிக்க ஊடு பயிராக தக்காளியையும் வளர்க்கிறார்கள். வாடல்நோயின் தாக்குதல் தக்காளியை பெரும்பாலும் பாதிக்கிறது.

இந்நிலையில், அதை தடுக்கும் வகையில் ஒட்டுதல் முறை பற்றிய விளக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தக்காளியில் வாடல்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கத்தரிக்காயின் நாத்தை பயன்படுத்தலாம். ஏனெனில், கத்தரிக்காயில் வாடல்நோய் தாக்குதல் இருக்காது. இந்த முறையை, தக்காளி மட்டும் அல்லாமல், மிளகாய் போன்ற, அதே குடும்பத்தை சேர்ந்த காய்கறிகளும் பின்பற்றலாம்.

இதில் கல்லூரி முதல்வர் சுதீஷ் மணலில், பேராசிரியர்கள் சத்ய பிரியா, பிரியா, பார்த்தசாரதி, மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img