fbpx
Homeபிற செய்திகள்எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்

எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு போட்டியில் மாணவர்கள் அசத்தல்

கோவை பீளமேட்டிலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான “டெக்ஸ்- ஆரா 2025” என்ற பேஷன் ஆடை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.


இயற்கையின் செதுக்கம் என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் பல்வேறு கல்லூரிகளிலுள்ள மாணவர்கள் இயற்கை உலகின் அழகு மற்றும் பன்முகத் தன்மையால் ஈர்க்கப்பட்ட அற்புதமான வடிவமைப்புகளுடன் தங்கள் படைப்புத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதன் பரிசளிப்பு விழா எஸ்.வி.பி. ஐ.எஸ்.டி.எம்- ன் இயக்குனர் முனைவர் அல்லி ராணி தலைமையில் நடந்தது. தலைமை விருந்தினராக, டெக்ஸ்காம்ஸ் வேர்ல்ட் வைட்டின் டிஜிட்டல் சொல் யூஷன்ஸின் துணைத் தலைவர் அமிர்தராஜ் டெட்ராராவ் குமார் பங்கேற்பாளர்களின் கலை திறமை மற்றும் படைப்பாற்றலை பாராட்டி பேசினார்.

டெக்ஸ்காம்ஸ் வேர்ல்ட் வைட் இன் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img