தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள கருங்குளம் மற்றும் இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 71 மாணவ மாணவிகள் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர் கல்வி வழி காட்டல் களப்பயணமாக கிள்ளிகுளம், வ.உ.சி. வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலை யத்திற்கு நேற்று (வியாழன் கிழமை) களப்பயணம் மேற்கொண்டனர்.
இதில் கல்லூரி முதன்மையர் முனைவர். மா.தேரடிமணி, வேளாண் இளங் கலைப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், கூடுதல் பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், உதவி தொகை திட்டங்கள், வேளாண் சார்ந்த போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கம் அளித்தார்.
இதனை தொடர்ந்து, நெல் சாகுபடியில் நெல் விதைக்கும் கருவி, நெற்பயிற்கான மேலுரம் இடுதல் மற்றும் களை மேலாண்மை பற்றி கல்லூரி விஞ்ஞானிகள் செயல் விளக்கங்களை அளித்தார்கள்.
முனைவர் மு.ஹேமலதா (பேராசிரியர் மற்றும் தலைவர் உழவியல் துறை) நெற்பயிரில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து மேலுரம் இடுவதையும் மற்றும் நெல் வயலில் உள்ள களைகளை களை கருவியைக் கொண்டுகளை எடுப்பது பற்றிய செயல் விளக்கங்களை அளித்தார். இச்செயல்விளக்கத்தினை பள்ளி மாணவர்களே செய்து பயிற்சி பெற்றனர்.
மேலும் முனைவர் ம.ஜோசப் (பேராசிரியர்-உழவியல் துறை) நெல் விதைப்பிற்கான வயல் தயாரிப்பு மற்றும் நேரடி நெல் விதைக்கும் கருவியின் மூலம் நெல் விதைப்பிற்கான தொழில் நுட்பம் பற்றிய செயல் விளக்கங்களை செய்து காண்பித்தார்.
இதனை பள்ளி மாண வர்களே செய்து பயிற்சி பெற்றனர்.
இந்த களப்பயணைத்தை முனைவர் ச.ஆறுமுகசாமி, (பேராசிரியர் -பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் துறை) ஒருங்கிணைத்தார்.
இந்த களப்பயணத்தில் கருங்குளம், அரசு மேல் நிலைப் பள்ளியின் தொழில் கல்வி ஆசிரியர் வி. சக்திவேல், ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் இராமானுஜம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் விஷாநிதி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.