fbpx
Homeபிற செய்திகள்நந்தா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்கலைக் கழக தரவரிசை பட்டியலில் சாதனை

நந்தா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் பல்கலைக் கழக தரவரிசை பட்டியலில் சாதனை

நந்தா கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரியின் மாணவ, மாணவியர்கள் 2023-2024ம் கல்வியாண்டிற் கான பாரதியார் பல் கலைக் கழகத் தேர்வின் தரவரிசை பட்டியலில் 4 தங்கப் பதக்கங்கள் உட்பட 33 இடங்களை பெற்று சாதனை புரிந்து தங்களது பெற்றோர்களுக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இவர்களைப் பாராட் டும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ் வில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் கலந்துக் கொண்டு முதலி டம் பெற்று சாதனை புரிந்த மாணவர்களான, இளங்கலை பிரிவில் ஆங் கிலத் துறையைச் சார்ந்த மாணவி மித்ரா, உயிர் தொழில் நுட்பவியல் துறையைச் சார்ந்த மாணவி கோபிகா மற்றும் முதுகலை பிரிவில் ஆங்கிலத் துறையைச் சார்ந்த மாணவி சங் கீதா, இயற்பியல் துறை யைச் சார்ந்த மாணவி ஜனனிஸ்ரீபிரியா ஆகி யோரை வாழ்த்திப் பேசியதோடு, அவர்தம் பெற்றோர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதுபோல இனி வரும்; காலங்களில் இன்னும் நிறைய பதக்கங்களை பெற்று பெற்றோர்களுக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்திடவும் மற்றும் அவர்களின் வாழ்வில் உயர்ந்த நிலைய அடைய அறிவுறுத்தினார்.
மேலும் இம்மாணவர் களின் சாதனைக்கு துணை புரிந்த துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரையும் வெகுவாக பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட் டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங் களின் செயலர் எஸ்.திரு மூர்த்தி, நந்தா கல்வி நிறு வனங்களின் முதன்மை கல்வி அலுவலர். எஸ்.ஆ றுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கே.கிருஷ்ணமூர்த்தி, கல்லூரியின் முதல்வர் எஸ்.மனோகரன், மற்றும் நிர்வாக அலுவலர் வி.சி. சீனிவாசன், ஆகி யோர் பங்குப்பெற்று தரவரிசையில் இடம் பெற்ற மாணவர்கள் அனைவரையும் வாழ்த்தி பாராட்டினார்கள்.

ஈரோடு நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் பி ஷண்முகன் பாரதியார் பல்கலைக்கழக 2023-&24 தேர்வில் நந்தா கலை அறிவியல் கல்லூரி சேர்ந்த 4 மாணவ மாணவ மாணவிகள் தங்க பதக்கங்களையும் 33 பேர் பல்கலைக்கழக ரேங்க் பட்டியலிலும் இடம் பெற்றதை பாராட்டி கல் லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய போது எடுக்கப்பட்ட படம். கல்லூரி செயலாளர்கள் நந்தகுமார் பிரதீப், திரு மூர்த்தி மற்றும் கல்லூரி முதல்வர் எஸ் மனோகர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img