fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச கால்பந்தாட்ட வீரருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

சர்வதேச கால்பந்தாட்ட வீரருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனையில் கேமரூன் நாட்டைச் சேர்ந்த 54 வயதான சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் மற்றும் கொலம்பே ஸ்போர்ட்டிவ் டு டிஜா எட் லோபோ கால்பந்தாட்ட குழுவின் தற்போதைய மேலாளருமான ரிச்சர்ட் டோவா என்பவருக்கு முழுமையான முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதை அறிவித்திருக்கிறது.

இது குறித்து மருத்து வமனை தரப்பில் கூறியுள்ளதாவது:
ரிச்சர்ட் டோவாவிற்கு வலது முழங்கால் மூட்டில் கிரேடு IV எலும்புப் புரை நோயின் கடுமையான பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து நவம்பர் 7ம் தேதியன்று எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவம னையின் எலும்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். நந்தகுமார் சுந்தரம் தலைமையிலான மருத் துவர்கள் குழு வலது முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை இவருக்கு வெற்றிகரமாக செய்தனர். இவ்வாறு கூறியுள்ளனர்.

இது குறித்து டாக்டர்.நந்தகுமார் சுந்தரம் கூறுகையில், “சிறப்பான மூட்டு நிலைப்புத்தன்மையையும் மற்றும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு மேம்பட்ட நடமாட்டத் திறனையும் உறுதி செய்வதற்கு இந்த சிகிச்சை செயல்முறை உதவியிருக்கிறது” என்றார்.

தொடந்து, ரிச்சர்ட் டோவா கூறுகையில், “இம்மருத்துவமனையில், மிக நவீன சிகிச்சை செயல்முறைகளும் மற்றும் மிக முக்கியமாக அவர்கள் வழங்கிய ஆலோசனை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளும் என்னை இயல்பு நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img