fbpx
Homeபிற செய்திகள்கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பழங்குடியின மேம்பாட்டு திட்டத்திற்கு அங்கீகாரம்

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் பழங்குடியின மேம்பாட்டு திட்டத்திற்கு அங்கீகாரம்

கடந்த 2023-24ம் ஆண்டில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஓர் அங்கமான கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனமானது சேலம் மாவட்டத்தின் ஐந்து பழங்குடி கிராமங்களை சேர்ந்த பழங்குடியினரிடையே ‘பழங்குடியின பிரிவிற்கான மேம்பாட்டு செயல் திட்டத்தினை செயல்படுத்தியது.

இத்திட்டத்தினை, சேலம் மாவட்ட பழங்குடியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முகமாக சிறப்பாக செயல்படுத்தியதை அங்கீகரித்து, இத்திட்டத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும் கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் புத்திர பிரதாப்பை சேலம் மாவட்ட நிர்வாகம் ‘பாராட்டி சான்றிதழ்’ வழங்கி கௌரவித்தது.

கடந்த 26ம் தேதி அன்று சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது மாவட்ட ஆட்சி யர் பிருந்தாதேவி, இச்சான் றிதழை வழங்கினார்.

ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற் றும் தற்போது சேலம் மாவட்டம் போன்ற இடங்களில் உள்ள தொலைதூர பழங்குடியின கிராமங்களைத் தேர்வு செய்து, இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய புத்திர பிரதாப், மோகன் ராஜ், கோபி, கீதா, பாபுராஜ், சந்தோஷ், மெ டேகர், ராஜா, கலகலி மற்றும் சேகர் உள்ளிட்ட குழுவினை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் கோவிந்தராஜ் பாராட்டினார்.

முன்னதாக பயிற்சி முகாம்கள் நடைபெறும் போது, மாவரைக்கும் இயந்திரம், பண்ணைக் கருவிகள், ஊட்டச்சத்துத் தோட்ட விதைகள், பேட்டரி தெளிப்பான்கள், சிறுதானிய விதைகள், கரும்பு விதைக்கரணைகள் , வானொலிப் பெட்டிகள் மற்றும் வீட்டுப் பொருட் கள் வழங்கப்பட்டு பழங் குடியின விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சிறு தானிய தொழில் முனைவு மேம்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img