கோவை மாவட்டம், சூலூர் சிறப்புநிலை பேரூராட்சியில் சிறந்த நிர்வாகத்திறன், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரமாக்கல் மற்றும் தனியார் நிதி உதவியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற தொடர் நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருவதினை ஆய்வுக்குட்படுத்தி ISO 9001:2015 உலகத்தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை, சூலூர் பேரூராட்சி மன்றத்தலைவர் தேவி மன்னவன் நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சோலை.ப.கணேசு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.