fbpx
Homeபிற செய்திகள்சுந்தரம் பைனான்ஸ் சார்பில் ஜனவரி 9ம் தேதி மைலாப்பூர் திருவிழா

சுந்தரம் பைனான்ஸ் சார்பில் ஜனவரி 9ம் தேதி மைலாப்பூர் திருவிழா

சுந்தரம் பைனான்ஸ் மைலாப்பூர் திருவிழாவின் 21வது பதிப்பு 2025 ஜனவரி 9 முதல் 12ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இத்திருவிழா, இசைக்கச்சேரிகளோடு தொடங்குகிறது.

மயிலாப்பூர் திருவிழாவில் சென்னையின் செழுமையான பாரம்பரியங்களும், கலாச்சாரமும், இசை, நாட்டுப்புற கலைகள், கோலப்போட்டிகள் மற்றும் பல்லாங்குழி மற்றும் தாயக்கட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் மயிலாப்பூர் கொண்டாட்டத்தில் இடம்பெறுகின்றன.

இந்நிகழ்ச்சிகளில் “பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்” என்ற குறிக்கோளை சுந்தரம் பைனான்ஸ் வலுவாக முன்னிலைப்படுத்துகிறது. மேலும், “மைலாப்பூரை தூய்மையாக பராமரிப்போம்” என்ற விழிப்புணர்வு பரப்புரை திட்டத்தையும் நடத்துகிறது.

இது குறித்து சுந்தரம் பைனான்ஸ்-ன் நிர்வாக இயக்குநர் ராஜிவ் லோச்சன் பேசுகையில், “மெட்ராஸின் சுவையை உணரவும், அனுபவிக்கவும் பல்வேறு தரப்பு மக்களையும் ஈர்க்கும் ஒரு திருவிழாவாக மயிலாப்பூர் திருவிழா பிரபல்யம் அடைந்திருக்கிறது” என்றார்.

மயிலாப்பூர் திருவிழா நிகழ்வின் இயக்குநர் வின்சென்ட் டிசோசா இது குறித்து கூறியதாவது: இந்த ஆண்டு, மைலாப்பூரில் உள்ள அருள்மிகு கோலவிழி அம்மன் திருக்கோவில் வளாகமானது, கோலம், பல்லாங்குழி, தாயக்கட்டம் மற்றும் வார இறுதி நாட்களில் கலை விழா கச்சேரிகளுக்கான அமைவிடமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img