fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாநகராட்சியில் இன்று ரூ.3.33 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

ஈரோடு மாநகராட்சியில் இன்று ரூ.3.33 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்: அதிமுக வெளிநடப்பு

ஈரோடு மாநகராட்சி அடுத்த நிதியாண்டிற்கு ரூ.3.33 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதாக பேரவைக் கூட்டத்தில் துணை மேயர் செல்வராஜ் முன்னிலையில் மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் இன்று(வெள்ளிக்கிழமை) பட்ஜட்டை தாக்கல் செய்து பேசினார்.

அதிமுக கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி பதில் அளித்து கூறியதாவது: கடந்த ஆண்டை போல் அல்லாமல் இந்த ஆண்டு உபரி மற்றும் பாசிட்டிவ் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சொத்து வரி வசூல் மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.50.60 கோடியாக இருந்த சொத்து வரி வருவாய் வரி உயர்வுக்கு பிறகு ரூ.64 கோடியாக இருந்தது. சொத்து வரி வருவாயை ரூ.100 கோடியாக உயர்த்தி, மாநகராட்சியை தன்னிறைவு அடையச் செய்வதே எங்கள் நோக்கம். கனி ஜவுளி மார்க்கெட் கடைகளை ஏலம் விட்டதன் மூலம் இதுவரை ரூ.13 கோடியும், நேதாஜி மார்க்கெட் வளாக ஏலத்தில் ரூ.3 கோடி வைப்புத்தொகையும் கிடைத்துள்ளது.

மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சிக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது. மேயர் விரைவில் பெற்றுக் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், 13 கோடி ரூபாய், 3 கோடி ரூபாய் வருமானம், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் இடம் பெறுவதாக ஆணையர் கூறியும் பட்ஜெட்டில் காட்டப்படவில்லை எனக் கூறி சூரம்பட்டி ஜெகதீசன், தங்கமுத்து தலைமையில் 6 அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img