fbpx
Homeபிற செய்திகள்புதிய செயல்திட்டங்களை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது

புதிய செயல்திட்டங்களை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 102வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம்  தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. வளர்ச்சி மற்றும் மாற்றத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் வங்கி எதிர்கால வளர்ச்சியை முன்னிறுத்திய விரிவாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கத்திற்கான திட்டத்தை வகுத்துள்ளது

இது குறித்து தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி எஸ். நாயர் கூறுகையில், “தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியானது பல்வேறு பிராந்தியங்களில் புதிதாக 40 கிளைகளைத் திறந்திட திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டையும் தாண்டி அதன் விரிவாக்கம் இருக்கும். நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில்துறை (எம்எஸ்எம்இ). சில்லறை வர்த்தக வளர்ச்சி, டிஜிட்டல் வங்கி சேவைகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். 

முக்கிய பகுதியாக டிஜிட்டல் உருமாற்றம் இருக்கும் அதே சமயம் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு அம்சங்களில் தனிக்கவனம் செலுத்தப்படும்” என்றார்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் புதிய செயல் இயக்குனராக வின்சென்ட் மேனாசெரி தேவசி பொறுப்பேற்றுள்ளார். வங்கியின் சிறப்பான செயல்திறன் திட்டங்களை அவர் முன்னின்று வழி நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img