பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (26ம் தேதி) திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஆதமங் கலம்புதூர் காவல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப் பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. எம்.சுதா கர் ஆகியேர் முன்னிலை வகித்த னர். இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
காவல் துறை என்பது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங் கை பாதுகாக்கின்ற மற் றும் பலருக்கு உதவுகின்ற முக் கியமான துறைகளில் ஒன்று. என்னை பாதுகாப்பதும் கூட காவல்துறையாக தான் இருக்கின்றது. பொதுமக்களுக்கு நண்பர்களாக இருந்து இந்த நாட்டிற்கு தொண்டு செய்த காவல்துறை என்பது இன்றைக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யில் சட்டம் ஒழுங்கு பேணி பாது காப்பதற்கு என்று 1309 காவல் நிலையங்கள், 47 ரயில்வே காவல் நிலையங்கள் உள்ளன. முதன் முத லாக மகளிரை காவலர்களாக உருவாக்கிய பெருமையும் முத் தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தான் உண்டு. அதற்கு முன்பு பெண்கள் எல் லாம் காவலர்களாக இருந்தது இல்லை.
நமது திருவண்ணாமலை மாவட்டம் ஆன்மீக தளமாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மை மாவட் டமாக திகழ்கிறது. அந்தவகையில் நமது மாவட்டத்தில் 39 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 மகளிர் காவல் நிலையங்கள், 1 குற்றப்பிரிவு காவல் நிலையம், 3 போக்குவரத்து காவல் நிலை யங்கள், 4 மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை காவல் நிலை யங்கள் என மொத்தம் 54 காவல் நிலையங்கள் உள்ளன. 24.08.2023 அன்று புதியதாக 55வது காவல் நிலையமாக கிரி வலப்பாதையில் புதிய சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின் படி திறந்து வைக் கப்பட்டது.
இன்று திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர் கள் பணி ஓய்வு பெற்ற நீதி அரசர் செல்வம் அவர்கள் தலைமையில் காவல் ஆணையம் அமைத்துள்ளார். கொரோனா காலத்தில் காவல்துறை தான் மிகச் சிறப்பாக செயல்பட்டது.
அதற்காக தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் கொரானா தடுப்புப்பணிகளில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு பாதுகாப்பு உபகரணம் வாங்க ரூ.5 கோடி நிதியினை வழங்கினார்கள். களப்பணியாற்றிய 1 லட்சத்து 17 ஆயிரம் காவலர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.5000, பொது மக்களிடையே நல்லுறவை மேம்ப டுத்த 5வது காவல் ஆணையம், காவலர் களுக்கு வழங்கப்படும் இடர் படி ரூ.800 லிருந்து ரூ.1000, பெண்களுக்கு எதிராக குற் றங்களை தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள், ரூ.482 கோடியில் 2,882 காவல்துறை வாடகை குடியிருப்புகள், ரூ.85 கோடியில் 42 காவல் நிலையங் கள் அமைக்கப்பட்டது.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை காப்பதில் தமிழக காவல்துறை சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பால சுப்பிரமணியன், காவல்துணை கண்காணிப்பாளர் மனோகரன், கலசபாக்கம் வட்டாட்சியர், வட் டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.