fbpx
Homeபிற செய்திகள்தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை சுமுகமாக தீர்த்திருக்கலாம், உடனே பூதாகரமாக மாற்றியது நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை சுமுகமாக தீர்த்திருக்கலாம், உடனே பூதாகரமாக மாற்றியது நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் தமிழிசை சௌந் தர்ராஜன் கூறியதாவது:
ஏதோ தமிழுக்கு இவர்கள் மட்டுமே காவலர்கள், இவர்கள் மட்டுமே தமிழ் பற்றாளர்கள், பாஜகவைச் சார்ந்தவர்கள், மத்திய அரசு தமிழ் மீது பற்று இல்லாதவர்கள் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்து வருகிறார். பிரதமர் மோடி மாநிலம் கடந்தும் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

ஆனால் ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா? நாம் தான் தமிழ் பற்றாளர்கள் என மீண்டும் மீண்டும் ஒரு பொய்யைச் சொல்லி மக்களை ஏமாற்றினோம், மீண்டும் ஏமாற்ற வேண் டும் என்ற அவசரம் முதல மைச்சரிடமும் அவரது டுவிட்களிலும் தெரிகிறது.

தமிழ் மாதம், வாரம் தமிழை கொண்டாடுவோம், ஆனால் இன்னொரு மொழியை கொண்டாடு வதன் மூலம் தமிழ் சிறு மைப்படுத்தப்பட்டு விட்டது என்ற வார்த்தையை தான் மறுக்கிறேன். ஏனென்றால் தமிழை யாரும் சிறுமைப்படுத்த முடியாது, சிறப்புற தான் செய்ய முடியும், அதனால் இனிமேலாவது மொழி அரசியலை திமுகவினர் விட வேண்டும்.

தமிழகத்தில் தமிழுக்கு எதிரானவர்கள் என சித்தரிக்க பார்க்கிறார்கள் என குற்றம் சாட்டிய தமிழிசை சௌந்தர்ராஜன், சமூக வலைதளங்களில் தன்னை ஹிந்திஇசை என பதிவிடுகிறார்கள், ஆனால் தமிழ் என்பது தன் பெயரில் மட்டுமில்லை, உயிரிலும் இருக்கிறது. முதலமைச்சர் ஒரு கூட்டத்துக்கு செல்லும் போது அங்கே ஒரு பாடல் பாடப்படுகிறது என்றால் அதில் தவறு இழைத்தார்கள் என்றால் முழுமையான பொறுப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொள்ள முடியாது. தவறு நடந்திருக்கக் கூடாது , அதில் தான உறுதியாக இருக்கிறேன். தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக, சரியாக, உணர்வுபூர்வமாக பாடப்பட வேண்டும், கட்டாயத்துக்காக பாடப் படக்கூடாது எனவும் ஆனால் அதை வைத்து ஒரு பூதாகரமான அரசியல் செய்து கொண்டிருக்கி றார்கள், இந்த இரட்டை வேடத்தை கண்டிக்கிறேன். அனைவரும் இரட்டை வேடம் போட ஆரம்பித்து விட்டார்கள்.

தமிழ் தாய் வாழ்த்தை தவறாகப் பாடுவதற்கு யாருக்கும் ஒப்புதல் கிடை யாது, ஆனால் அதற்காக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது சரியில்லை.
ஆளுநர்கள் மோதல் போக்கை கொண்டு வருவ தில்லை, ஆளுநரிட மும் முதலமைச்சர் இடமும் இணக்கமான சூழ்நிலை வர வேண்டும், நேற்று நடந்த சம்பவத்தை கூட சுமுகமாக தீர்த்திருக்கலாம், உடனே பூதாகரமாக மாற்றி யது நல்லதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img