fbpx
Homeபிற செய்திகள்தமிழக வெற்றி கழக மாநாட்டில் திரளாக பங்கேற்க தூத்துக்குடி கூட்டத்தில் முடிவு

தமிழக வெற்றி கழக மாநாட்டில் திரளாக பங்கேற்க தூத்துக்குடி கூட்டத்தில் முடிவு

தமிழக வெற்றி கழக மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாநாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மணி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு ஆள் உயர மாலை அணிவித்தும் சால்வை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமை தாங்கி அவர் பேசும்போது இந்த எழுச்சியை பார்க்கும்போது 2026 ல் நாம் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது ஆகையால் தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகத்துடன் உழைக்க வேண்டும் என்றார்

மேலும் இந்த மாநாட்டில் தூத் துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வோம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளது என தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அஜிதா ஆக்னல் செய்தியாளரிடம் பேசும்போது மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரிடமும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வாங்கப்பட்டு மாநாட்டில் அனைவரும் பத்திரமாக கலந்து கொண்டு திரும்பும் படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தனித்தனியாக தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது மேலும் தளபதியின் மாநாடு தளபதியின் நாடாக தமிழ்நாடு அமையும் என அஜிதா ஆக்னல் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img