தமிழ்நாடு வேளா ண்மைப் பல்கலைக் கழகத்தில் பயிர் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சார்பில் ஒருங்கிணைந்த ஆரோக்கியக் கோணத்தில் உலக பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.
இம்மாநாடு, பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றிய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள உலகளாவிய நிபுணர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
நிகழ்வில் பூச்சியியல் துறையின் தலைவர், முனைவர் மா.முருகன் வரவேற்றுப் பேசினார். பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் முனைவர் மூ.சாந்தி, மாநாட்டின் முக்கியத்துவம் மற்றும் நோக்கங்களை விளக்கினார்.
துவக்க விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் வி.கீதாலட்சுமி தலைமை தாங்கி பேசுகையில், நிலையான வேளாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடை முறைகளை ஊக்குவிப்பதில் பல்கலை க்கழகத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். வேளாண் துறையில் உள்ள பல்வேறு சிக்கல்களை சமாளிப்பதற்காக துறைசார் ஆய்வுகள் மற்றும் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் பயிர் பாதுகாப்பு ஆலோசகரும் தாவரப் பாதுகாப்பு தனிமைப்படுத்தல் மற்றும் சேமிப்பு இயக்கு நருமான சாமுவேல் பிரவீன் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், முனைவர். சோணை ராஜன், பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சியில் ஒருங்கிணைந்த ஆரோக்கியம் மற்றும் அணுகுமுறையைப் பின் பற்றுவதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தினார்.
மனித – மிருக, தாவர ஆரோ க்கியங்களின் பரஸ்பர உறவை உணர்ந்து, நிலைத் தன்மை வாய்ந்த சுற்றுச் சூழலைக் காக்கும் பூச்சிக் கட்டுப்பாட்டு முறை களைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அவர் தெரிவித்தார். இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கவும் உதவும் என்றும் அவர் கூறினார்.
இந்திய பூச்சியியல் சங்கத்தின் தலைவர் டாக்டர். வி.வி.ராமமூர்த்தி சிறப்புரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் மற்றும் அரசு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் விரிவான சுருக்கங்கள் (VOL I & II), Emerging Frontiers in Plant Health: Experts Perspectives என்ற மொபைல் பயன்பாட்டை துணைவேந்தரும் சிறப்பு விருந்தினர்களும் வெளியிட்டனர். புதிய பயிர் பாதுகாப்பு தயாரிப்புகளை உள்ளடக்கிய கண்காட்சியை டாக்டர் சாமு வேல் பிரவீன் குமார் திறந்து வைத்தார்.
தாவர நோயியல் துறை தலைவர் டாக்டர் க.அங்கப்பன் நன்றி கூறினார். மேலும் மாநாடு அதன் தொழில்நுட்ப அமர்வுகளுடன் தொடர்ந்தது. துவக்க அமர்வில் 40 ஓய்வுபெற்ற பயிர் பாதுகாப்பு அறிவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.