fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்: நிரந்தர அங்கீகாரம் கேட்டு தீர்மானம்

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்: நிரந்தர அங்கீகாரம் கேட்டு தீர்மானம்

தமிழ்நாட்டின் அனைத்து தனியார் பள்ளி களும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து உருவான தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகாசி AAA இன்ஜினியரிங் கல்லூரியில் வைத்து மாவட்ட தலைவர் வைமா. திருப்பதி செல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இன்ஸ்டீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

கல்லூரியின் சார்பில் இணைச் செயலாளர் விக்னேஷ், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பள்ளிகளின் எதிர்கால செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார் கல் லூரியின் முதல்வர் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாநில ஆலோசகர் சவுத் சைட் சீனிவாசன் மற்றும் திருநெல்வேலி மண்டல செயலாளர் கல்யாணி சுந்தரம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்டு சங்கத் தின் கொள்கைகள், நோக்கங்கள், மற்றும் செயல்பாடுகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசிடம் நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி பிரச்சனைக்கு தீர்வு, நர்சரி பிரைமரி பள்ளிகளை தரம் உயர்த்தி நடுநிலைப் பள்ளிகளாக மாற்றுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட் டத்தில் 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரையும் பொருளாளர் முருகேசன் நன்றியுரையும் வழங்கினர்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் அரசகுமார், மாநில செய லாளர்கள் நந்தகுமார், இளங்கோவன், மாநில பொருளாளர் ஸ்ரீதர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், மாநில சட்ட செயலாளர் மனோகரன் ஜெயக்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாழைமணி அவர்கள் உட்பட சங்கத்தின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img