fbpx
Homeபிற செய்திகள்இந்தோனேஷியாவிலும் தமிழ்நாட்டுத் திட்டம்!

இந்தோனேஷியாவிலும் தமிழ்நாட்டுத் திட்டம்!

ஏழை மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து கல்வியறிவைப் பெருக்க வகை செய்யும் வகையில், சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது செயல்படுத்தினார்.

பின்னர் சத்துணவுத் திட்டமாக உருமாறி விரிவுப்படுத்தப்பட்டது. மறைந்த முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இத்திட்டம் இன்றுவரை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போதுகூட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தையும் கொண்டுவந்து மாநில குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

இப்படி, தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம், இன்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இந்த திட்டம் வெளிநாட்டிலும் தொடங்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் சத்துணவுத்திட்டம் உலகிலேயே ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 8.3 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது உலக நாடுகளின் கவனத்தை தமிழ்நாட்டின்பால் திரும்ப வைத்துள்ளது. சர்வதேச அரங்கில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் இத்திட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சத்துணவுத் திட்டம் எல்லை தாண்டி இந்தோனேஷியாவில் அமலுக்கு வந்திருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை தரும் விஷயமாகும்.

தமிழ்நாட்டின் சத்துணவுத் திட்டம் உலகளாவிய திட்டமாக உருவெடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

படிக்க வேண்டும்

spot_img