fbpx
Homeபிற செய்திகள்கோவை ஓ பை தாமரா ஹோட்டலில் செட்டிநாடு உணவு திருவிழா

கோவை ஓ பை தாமரா ஹோட்டலில் செட்டிநாடு உணவு திருவிழா

கோவை  ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு உணவு திருவிழா நடைபெறுகிறது. பஃபே முறையில் நடைபெறும் திருவிழாவில்  செட்டிநாடு உணவு பிரியர்களுக்கான அளவற்ற  செட்டிநாடு உணவு வகைகளை ஒரே இடத்தில் உண்டு மகிழலாம்.  தினமும் இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த உணவு திருவிழாவானது ஜூன் 7 முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் செட்டிநாட்டு சிக்கன் கறி, ரத்த பொரியல், குடல் கொழம்பு, மட்டன் சுக்கா உள்ளிட்ட பல உணவுகளை உண்டு மகிழலாம். உண்மையான செட்டிநாட்டின் சுவையை தேடும் உணவு பிரியர்களுக்காக கோவை ஓ பை தாமரா இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. 

பெரியவருக்கு ரூ.1799 மற்றும் 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ. 999 என இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  டைடல் பார்க்  மற்றும் கார்ப்ரேட் நிறுவன ஊழியர்களுக்கு  20% தள்ளுபடியும் வழங்கப்படும். முன்பதிவுக்கு +9142 2693 0000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

படிக்க வேண்டும்

spot_img