fbpx
Homeபிற செய்திகள்ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம்

ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம்

கல்வியின் தரத்தை உயர்த்துவதோடு அடுத்த தலைமுறை மாணவர்களை தயார்படுத்தும் ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தும் விதமாக கோவையில் ஜி.ஆர்.ஜி. கல்வி குழுமம் மற்றும் இந்திய மேம்பாட்டு அறக்கட்டளையுடன் இணைந்து பயிற்சி பட்டறை கருத்தரங்கம் நடைபெற்றது.
தற்போதைய நவீன காலத்தில் பள்ளிகளில் கற்கும் மாணவ, மாண விகளின் திறன்கள் மாறுபட்டு உள்ள நிலையில், கற்பிக்கும் முறைகளிலும் பல்வேறு நவீன மாற்றங்கள் அவசியமாக உள்ளது.

இந்நிலையில் கல்வியியல் தொழில் நுட்ப மாறுபாடுகளை ஆசிரியர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை ஜி.ஆர்.ஜி. கல்வி குழுமங்கள் மற் றும் இந்தியன் டெவ லப்மெண்ட் டிரஸ்ட் ஆகியோர் இணைந்து ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை கருத்தரங்கம் கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ஹரிதா முன்னிலையில் நடைபெற்ற இதில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான துறைகளில் கூடுதல் கவனம் செலுத் துவதும் அது சார்ந்த துறைகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், தரமான கல்விக்கு அறிவியல் ஆசிரியர்களை மேம்படுத்துவது குறித்து அமர்வுகள் நடைபெற்றன.

இதில், புகழ் பெற்ற அணுவிஞ்ஞானியும், சர்வதேச கோபர் நிகஸ் பரிசு பெற்றவரும், இந்திய மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலருமான டாக்டர் ஏ.பி.ஜெயராமன் அறிவியல் துறையின் வேதியியல், இயற்பியல், உயிரியல் போன்றவற்றின் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகள், ஒற்றுமைகள் அவற்றை ஆசிரியர்கள் தெரிந்து கொள்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து நடை பெற்ற அமர்வுகளில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணா, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் லாரா ரிச்சர்ட்ஸ், ரோசன் ஆகியோர் புதிய கற்பித்தல் முறைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து பேசினர். இதில் கோவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img