fbpx
Homeபிற செய்திகள்கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான டெக்னோ மேலாண்மை தேசிய சந்திப்பு நிகழ்ச்சி

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான டெக்னோ மேலாண்மை தேசிய சந்திப்பு நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் பொறியியல், மேலாண்மை, வேளாண்மை, கட்டிடக்கலை, சட்டம், கலை மற்றும் அறிவியல் துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக 2 நாட்கள் டெக்னோ மேலாண்மை தேசிய சந்திப்பு யூஃபோரியா ‘25 நடைபெற்றது.

நிறைவு விழாவில், வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் ,87க்கும் மேற்பட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ.18 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன் மற்றும் பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜே.பிரதீப் கந்தசாமி அனைவரையும் வரவேற்றார். பெங்களூரு, ஐபிஎம் நிறுவன டெலிவரி தலைவர் விகார்டின் சுர்கி, 24 மணிநேர தொடர் ஹேக்கத்தான் போட்டி களைத் துவக்கி வைத்து கண்காணித்து, சிறப்பாக செயல்பட்ட மாணவர் களுக்கு கம்பெனி அப் ரென்டிஷிப்பிற்கான அனுமதியை அறிவித்து உரையாற்றினார்.

நாடு முழுவதும் உள்ள பிற கல்விநிறுவனங்களில் இருந்து 3000 மாணவர்களும், கலசலிங்கம் பல்கலையிலிருந்து 4000 மாணவர்களும் பங்கேற்றனர்.
டீன்கள் முனைவர்கள் பி.சிவகுமார் மற்றும் என்.சிவகுமார், பேராசிரியர் எஸ்.கபிலன் ஆகியோர் இயக்குநர்களுடன் ஒருங்கிணைந்து அனைத்துப் பள்ளிகளின் டீன்கள், பேரா சிரியர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பேராசிரியர் பென்னிலோ பெர்னாண்டஸ் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img