fbpx
Homeபிற செய்திகள்தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைந்து நடத்திய பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக, பிசிசிஐ லெவல் 2 கோச் இந்திரகுமார்
பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கேடயங்களும், பங்கேற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதே போல் சிறந்த பேட்ஸ்மென், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், சிறந்த ஆல்ரவுண்டர் என தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் சிறப்பு பரிசுகளும், வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கோப்பை கள் வழங்கப்பட்டதுசிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக கிரிக்கெட் உபகரணங்களும் வழங்கப்பட்டது.


வெற்றி பெற்ற அணிகளுக்கு தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீநாத் ராமன் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img