தேசிய அளவிலான ஜூனியர் தாங்-டா சாம் பியன்ஷிப் போட்டி, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் டிசம்பர் 1,2,3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு அணியில் 60 கி.எடை பிரிவில், பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மேல் நிலைப்பள்ளி மாணவி வி.மேரிபிரியதர்ஷினி வெள்ளிப்பதக்கம் வென்றார் .
60 கிலோ எடை பிரிவில், ஸ்டேன்ஸ் சிபிஎஸ்சி பள்ளி மாணவர் வி.ஜெயசிம்மன் வெள்ளிப் பதக்கம் வென்றார் .
நேஷனல் மாடல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.பி. திவ்யா, 52 கி. எடை பிரிவில் காலிறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
கோபால்நாயுடு உயர் நிலைப்பள்ளி மாணவி எஸ்எஸ் ஷிவானி, 56 கி. எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வியூ.ஹேமந்த், 52 கி. எடை பிரிவில் காலிறுதி ஆட்டத் தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வெற்றி பெற்ற வீரர்களை கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் வாழ்த்தினார்.