fbpx
Homeதலையங்கம்மெட்ரோவிற்கு நிதி தராமல் மத்திய அரசு ஓரவஞ்சனை!

மெட்ரோவிற்கு நிதி தராமல் மத்திய அரசு ஓரவஞ்சனை!

சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடிகள் செலவில் கட்டப்படும் மெட்ரோ திட்டங்கள் பற்றி 2021-2022 மத்திய அரசின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ மற்றும் நாசிக் மெட்ரோவைத் தவிர அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற 3 மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 3 வருடங்களாக தமிழ்நாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை.

சென்னை மெட்ரோ 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு செயல்பட்டு வருறது. அதை தவிர 118.9 கிலோ மீட்டருக்கு மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானம் முடிந்தால் சென்னையில் 170 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை மெட்ரோ செயல்படும். இந்த கட்டுமானத்திற்கு மத்திய அரசுதான் பணம் கொடுக்கிறது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவரின் பேச்சில் பாதிதான் உண்மை. அதாவது முதலில் கட்டப்பட்ட 54.1 கிலோ மீட்டர் மெட்ரோவிற்கு மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கியது. இரண்டாம் கட்ட மெட்ரோவிற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை என்பதே உண்மை.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக நேரில் முறையிட்டார். அப்படி இருந்தும் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு ஒரவஞ்சனையாக நடந்து வருகிறது.

புதிதாக அமையப் போகும் மத்திய அரசாவது அது எந்தக்கட்சியாக இருந்தாலும் இதனை பரிசீலித்து சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கித் தரவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img