fbpx
Homeபிற செய்திகள்நெசவாளரின் இடிந்த வீட்டுக்கு பதிலாக புதிய வீடு கட்டி கொடுத்த அமைச்சர்

நெசவாளரின் இடிந்த வீட்டுக்கு பதிலாக புதிய வீடு கட்டி கொடுத்த அமைச்சர்

வாலாஜா நகராட்சி, ஒத்தவாடைத் தெருவில் வசிக்கும் வத்சலா என்கிற நெசவாளரின் வீடு கடந்த வடகிழக்கு பருவமழையினால் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, புதிய வீடு கட்டித்தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து கைத்தறித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.4 லட்சம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தியின் சொந்த நிதி ரூ.3 லட்சம் என மொத்தமாக ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டது. புதிய குடியிருப்பினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, உதவி இயக்குநர் (கைத்தறித் துறை) சத்யபாமா, நகரமன்றத் தலைவர் ஹரிணி தில்லை, துணைத் தலைவர் கீவி.கமலராகவன் மற்றும் நகர செயலாளர் து.தில்லை, இளைஞர் அணி குணா, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் குலோத்துங்கன், சசி இர்பான், ஒப்பந்ததாரர் புருஷோத்தமன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img