தேனி மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து விருது பெற்ற ஆண்டிபட்டி ஒன்றியம் சண்முக சுந்தரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினத்துக்கு பாராட்டு விழா ஊர்மக்கள் சார்பாக நடைபெற்றது.
விழாவிற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகி குருசாமி தலைமை தாங்கினார். விழாவில் அமமுக தொகுதி பொறுப்பாளர் அய்யனன் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி முன்னாள் பேரூராட்சி சேர்மன் ஆ.ராமசாமி, சி.பி.எம் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் வரதராஜன், முன்னாள் தலைமை ஆசிரியர் கிருஷ்ண ராமானுஜம், கவிஞர் ஞானபாரதி, முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், ரங்கநாதபுரம் பிரமுகர் பாலகிருஷ்ணன், ரத்தின வேல் பாண்டியன் உள்பட அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
மேலும் ஊராட்சியை சேர்ந்த கரிசல்பட்டி ,முத்து சங்கிலிபட்டி, எஸ். ரங்கநாதபுரம், மலையாண்டிநாயக் கன்பட்டி, எஸ்.எ ஸ்.புரம், வேலாயுதபுரத்தைச் சேர்ந்த ஊர் நாட்டாமைகள் முன்னிலை வகித்தனர்.
விருது பெற்ற ஊராட்சி மன்ற தலைவருக்கு அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப் பினர் பொதுமக்கள் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர். நிறைவாக ரத்தினம் ஏற்புரையாற்றி உப தலைவர், வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர், துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள், மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.