fbpx
Homeபிற செய்திகள்தேனி நாடார் சரஸ்வதி கல்லூரியில் 800 மாணவியருக்கு பட்டம்

தேனி நாடார் சரஸ்வதி கல்லூரியில் 800 மாணவியருக்கு பட்டம்

தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் 26 ஆவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது கல்லூரியின் முதல்வர் முனைவர் சித்ரா வரவேற்புரை நிகழ்த்தின தனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவுமுறை தலைவர் ராஜமோகன் தலைமையிலும் உப தலைவர் கணேஷ் ,பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் பழனியப்பன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கல்லூரியின் செய லாளர் காசி பிரபு , இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜ் ,கல்லூரியின் அகாடமி டீன் முனைவர் கோமதி, முனைவர் சரண்யா ,துணை முதல்வர்கள் சுசிலா சங்கர் , உமா காந்தி, கிருஷ்ணவேணி மற்றும் விடுதி காப்பாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இந்த 26வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக காவல்துறை அதிகாரி பாரி ஐபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், பட்டம் பெறுவது வேலை வாய்ப்புக்காக மட்டு மல்ல. அறிவாற்றலை மேம் படுத்துவதும் வாய்ப்புகளை வசப்படுத்தி பழமை வாத கருத்துக்களை புறம் தள்ளி புதிய கருத்துக்களை மாணவர்கள் ஏற்க வேண்டும்.

புத்தகம் என் பது வெறும் காகிதம் தொடர்ந்து படித்தால் அதுவே பேராயுதம் என்றும் ,நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதி யாக பின்தங்கிய மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் நோக்கத்தில் மாணவிகளுக்கு சிறந்த கல்வியினை கொடுத்து வருகிறது என்றும், கல்வி கற்கும் காலத்தில் படிப்ப போடு சேர்ந்த குறுகிய கால படிப்பினை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள் என்றும், மாணவியர்கள் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக தேர்வில் முதல் இடம் பிடித்த 11 மாணவிகளுக்கு தங்கப்பதற்கும் இரண் டாம் இடம் பிடித்த 13 மாணவிகளுக்கு பதக்க மும் மொத்தமாக 800 மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img