தேனி, மதுரை ரோட்டில் தேனி மாவட்டத்தில் உள்ள எஸ்சி எஸ்டி மாணவ மாணவிகளுக்கு வருடம் தோறும் முதலிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று நான்காம் ஆண்டு விழாவாக தேனி மதுரை ரோட்டில் அமைந்துள்ள பங்களா மேட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் பெற்றோருடன்கலந்து கொண்டனர். பரிசு பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் மெடலும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி கலந்துகொண்டு நம்மை ஏளனம் செய்வோர் முன்பு நல்லபடியாக வாழ வேண்டும் என்றால் படிப்பு ஒன்றே நம்மை உயர்த்தும், பணம் புகழ் எதுவும் நம்மிடம் நிரந்தரம் இல்லை படிப்பு ஒன்றே நிரந்தரமானது.
வருங்காலங்களில் இங்கு பரிசு பெறும் மாணவ மாணவிகள் ஒரு மாவட்ட ஆட்சியராக அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வரவேண்டும் என்பது உங்களுடைய இலக்காக இருக்க வேண்டும். அதை குறிக்கோளாக கொண்டு நீங்கள் அனைவரும் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டுமென உரையாற்றினார்.
இந்த நிகழ்வினை மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டணி சார்பாக நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கருப்பையா (மாவட்டத் தலைவர்), மாநில மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள், கருப்பையா (நிறுவனர் – மாநில அமைப்பாளர்) சிறப்பு அழைப்பாளராக தாளை முத்தரசு (வழக்கறிஞர்) மற்றும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், மாநில மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.