fbpx
Homeபிற செய்திகள்உலக முதியோர் தின விழாவில் திருவண்ணாமலை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்பு

உலக முதியோர் தின விழாவில் திருவண்ணாமலை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இன்று திருவண்ணாமலை வட்டம், அத்தியந்தல் ஊராட்சியில் எம்டிஎம் ஆண் குழந்தைகள் இல்ல வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் டெரிடெஸ் ஹோம்ஸ் கோர் டிரஸ்ட் சார்பாக உலக முதியோர் தினவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

உலக முதியோர் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- உலக முதியோர் தினம் சமூக நலத்துறையின் சார்பாக 14 முதியோர் இல்லங்களை ஒருங்கிணைத்து நடைபெறுகிறது.

சமூக நலத்துறையின் சார்பாக பல்வேறு சட்டங்கள் சமூக பாதுகாப்புக்காக இயற்றப்பட்டுள்ளது. குறிப்பாக முதியோர்க ளுக்கான பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு நலன் மற்றும் பாதுகாப்பு சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதுமட்டுமின்றி அவர்கள் அனைத்து சட்டங்களை பயன்படுத்தி உரிமைகளை பெறலாம். பெற்றோர்கள் தங்களது சொத்துக்களை வாரிசுதாரர்களுக்கு வழங்கிய பிறகு, பெற்றோர்களை பராமரிக்காமல் இருந்தால் அவர்களது சொத்துக்களை திரும்ப பெறப்படுவதற்கு சட்டம் உள்ளது.

பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பராமரிப்பு மற்றும் நலனை பேண அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்டவாறு, சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது

இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைந்து தீர்ப்பதற்காகவும், குழந்தைகள் சட்டப்பூர்ல வாரிசுகளிடம் இருந்து மூத்த குடிமக்கள், பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையைப் பெற ஒவ்வொரு துணை கோட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட் டுள்ளது.

மாவட்ட சமூக நல அலுவலர்கள் பராமரிப்பு அலுவலர்களாகவும் சமரச அலுவலர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறுவ தற்கு 14567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இல்லங்களில் உள்ள முதியோர்களின் நலன், அடிப்படை தேவைகள், உணவுகள் மற்றும் அவர்களது பிரச்சனைகள் கேட்டறிந்து அதற்கான தீர்வு காணப்படுகிறது. முதியோர்கள் சமூகத்தில் அனைத்து உரிமைகளையும் பெறுவதற்கு சட்டங்களும், மாவட்ட நிர்வாகமும் என்றும் உதவியாக இருக்கும். மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களும் கண்காணிக்கப்பட்டு அவர்களது தேவைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

மேலும் முதியோர்கள் தங்களுக்கு உள்ள உரிமைகளை சட்டங்களை பயன்படுத்தி பெறுவதற்கு அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரண்யா, பாதுகாப்பு அலுவலர் கோமதி டிடிஎச் நிறுவனர் செழியன், முதியோர்கள், மாணவிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img