திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன கடந்த 23ம் தேதி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், தி.வாளவெட்டி ஊராட் சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதை செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக, 2010ல், “கலைஞர் வீடு வழங்கும் திட்டம்” தொடங்கப்பட்டது. கலைஞர் கனவு இல்லம் என்பது வீடற்ற குடிமக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அர சால் தொடங்கப்பட்ட ஒரு சமூக நலத்திட்டமாகும். இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் வீடற்ற குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே அடிப்படையாக கொண்டதாகும். திருவண்ணாமலை மாவட்டத் தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து, இன்றைய தினம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தி.வாளவெட்டி ஊராட்சியில் வெங்கடேசன் என்ற பயனாளிக்கு அரசு சார்பாக கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிக்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த வெங்கடேசன் என்ற பயனாளி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண் டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் டாக்டர் மணி, திருவண்ணாமலை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சையத் பயாஸ் அகமத், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரமேஸ்வரன், பிரித்விராஜ் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.